என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முகத்துவாரம் தூர்வாருதல்
நீங்கள் தேடியது "முகத்துவாரம் தூர்வாருதல்"
பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணி காரணமாக அடைக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி, நிரந்தர முகத்துவாரம் அமைக்க கோரி ஆரம்பாக்கம் முதல் பழவேற்காடு வரையில் உள்ள மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் மகேஸ்வரி, பலராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி, நிரந்தர முகத்துவாரம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காலிகமாக ரூ. 15 லட்சம் செலவில் முகத்துவாரம் தூர்வாரப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து கடந்த வாரம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
நேற்று மாலை கடலையும், ஏரியையும் இணைக்கும் பகுதியில் 2 ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தலைமையில், பொதுப் பணித்துறை அதிகாரிகள், மீனவர்கள் முன்னிலையில் முகத்துவாரம் திறக்கப்பட்டது.
நீரோட்ட அடிப்படையில் மலர் தூவி கடலில் முகத்துவாரத்தில் ஏரி நீர் கலக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் 6 மணி நேரம் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வதால் மீன்வளம் பெருகும் எனவும், நிரந்தர முகத்துவாரம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கிடைத்த உடன் விரைவில் தொடங்கப்படும் என மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்தார்.
இதில் பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முகத்துவாரம் உடனடியாக அடைபட்டு போனதால் மீனவர்கள் இன்று கடலில் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

×

X